முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கசாப்பை காப்பாற்ற ரூ.28 கோடி! தூக்கில் போட ரூ.9,573 மட்டுமே!

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, டிச.8 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைதான தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு நான்கு ஆண்டுகளாக மராட்டிய மாநில அரசும் மத்திய அரசும் 28 கோடி ரூபாய் செலவு செய்தனவாம். அதேசமயம் தூக்கில் போடுவதற்கு செலவாக வெறும் 9,573 ரூபாய்தான் செலவழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த மாதம் புனேயில் உள்ள எர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். நான்கு ஆண்டுகளாக அவனுக்கு பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கசாப் கைதானது முதல் தூக்கிலிடப்பட்டது வரை மராட்டிய அரசும், மத்திய அரசும் செலவு செய்துள்ள தொகை எவ்வளவு என்பது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அணில் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மராட்டிய மாநில அரசு அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது

அஜ்மல் கசாப் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் செலவுகள் செய்யப்பட்டன. கசாப்புக்கு மொத்தம் ரூ. 28 கோடியே 46 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதில் மராட்டிய மாநில அரசு 6 கோடியே 76 லட்சத்து 49 ஆயிரத்து 676 ரூபாய் 82 காசு செலவிட்டுள்ளது. இதில் பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 1,50,57,774.90 செலவிடப்பட்டுள்ளது.

தவிர கசாப்பின் சாப்பாட்டு செலவு ரூ. 43,417. மருத்துவத்துக்கு ரூ.32,097 செலவிடப்பட்டுள்ளது. அஜ்மல் கசாப்புக்கு உடைகள் எடுத்து கொடுத்த வகையில் ரூ.2047 செலவிடப்பட்டுள்ளது.

கசாப்பை தூக்கில் போட்ட தினத்தன்று 33 ரூபாய்க்கு சாப்பாடும் 169 ரூபாய்க்கு புதுசட்டையும் வாங்கிக் கொடுத்தோம். இறுதி சடங்குக்கு மொத்தம் ரூ.9,573 செலவு செய்யப்பட்டது. இவ்வாறு மராட்டிய மாநில அரசு கூறியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்