முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோணியை ரன் அவுட் ஆக்கியதால்தான் ஆட்டத்தின் போக்கு மாறியது

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர்: டிச. - 17 - கொல்கத்தா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாராவை அவுட் ஆக்கியது போல் நாக்பூர் போட்டியில் டோணியை அவுட் ஆக்கியதால் ஆட்டத்தின் போக்கு மாறியது என்று இங்கிலாந்து வீரர் ட்ராட் கூறியுள்ளார். நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோணி 99 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த ஓராண்டுக்குப் பிறகு அவர் அடிக்க இருந்த முதல் சதம் மயிரிழையில் பறிபோனது. இது தொடர்பாக இங்கிலாந்து வீரர் ட்ராட் கூறுகையில். முதல் இன்னிங்சில் கடைசி ஒரு மணிநேரம்தான் எங்களுக்கானதாக அமைந்தது. குறிப்பாக கேப்டன் குக், டோணியை ரன் அவுட் ஆக்கியதுதான் ஆட்டத்தின் போக்கே மாறக் காரணமாக இருந்தது. இந்த ரன் அவுட் தொடரின் போக்கையும் கூட தீர்மானிக்கலாம். ஓவல் மைதானத்தில் பாண்டிங்கை பிளின்டாப் ரன் அவுட் செய்ததுபோலவே இருந்தது குக்கின் வேகம். கொல்கத்தா போட்டியில் புஜாராவை ரன் அவுட் செய்ததால் போட்டியின் நிலைமை மாறியது. நாக்பூரிலும் இது எதிரொலிக்கலாம் என்றார் அவர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்