அமர்சிங் புதிய கட்சி துவக்குகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      இந்தியா
Amar singh

 

பல்லியா,ஏப்.18 - சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவரான அமர்சிங், விரைவில் புதிய அரசியல் கட்சியை துவக்குகிறார். அவரது கட்சிக்கு ராஷ்டிரிய லோக்மன்ஞ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து அமர்சிங்கின் இளைய சகோதரர் அரவிந்த்சிங் கூறுகையில், 

புதிய கட்சியை பதிவு செய்வது, அதற்கு சின்னம் ஒதுக்குவது போன்ற இறுதிக் கட்ட பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பாக உள்ளன என்று தெரிவித்தார். இந்த பணிகள் முடிந்த பிறகு இந்த மாதத்திற்குள் புதிய கட்சி முறைப்படி துவக்கப்பட்டு விடும் என்றும் அரவிந்த்சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: