முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க தேர்தலில் பத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தடியடி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

மால்டா, ஏப்.- 19 - மேற்குவங்க மாநிலத்தில் நேற்று 54  தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மால்டா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பத்திரிகையாளர்கள் மீது அதாவது புகைப்பட கலைஞர்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் தடியடி நடத்தினர். இதில் பல கேமராமேன்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக இம்மாநிலத்தின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஷைலன் சர்க்கார் மால்டா மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார். இம்மாவட்டத்தில் பெண்கள் கல்லூரியில் இவருக்கான வாக்குச்சாவடி அமைந்திருந்தது. வாக்குச் சாவடிக்குள் அமைச்சர் நுழைந்தபோது அங்கே காத்திருந்த புகைப்பட கலைஞர்கள் அவரை பின்தொடர்ந்து செல்ல முயன்றனர். ஆனால் வாக்குச்சாவடிக்குள் அவர்கள் நுழைவதற்கு பாதுகாப்பு வீரர்கள் ஆட்சேபணை தெரிவித்தும்கூட அதையும் மீறி கேமராமேன்கள் உள்ளே நுழைய முற்பட்டபோது பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் சில புகைப்பட கலைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல் 4 மணி நேரத்திலேயே அதாவது 11 மணிவரை 32 சதவீத வாக்குகள் பதிவாயின. அசம்பாவித சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்