முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏரிகள்- குளங்களை சீரமைக்க தடுப்பணைகள் கட்ட ரூ.98.67 கோடி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.- 21 - ஏரிகள், குளங்களை சீரமைக்கவும், தடுப்பணைகள் கட்டவும், கடல் அரிப்பு தடுப்புச் சுவர்களை பராமரிக்கவும் ரூ.98 கோடியே 67 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-   நீnullர் இன்றி அமையாது உலகு என்றனர் ஆன்றோர்.  பாசனத்திற்கான nullநீர்வள அமைப்புகளை வலுப்படுத்துவது வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வில் வளம் பெறவும், nullநீடித்த வேளாண்மை  வளர்ச்சியை அடைவதற்கும் வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் நிலத்தடி nullநீர் மட்டத்தை  உயர்த்திடவும், அனைத்து ஏரிகளிலும் சிறந்த முறையில் நீnullரைத் தேக்கிட வசதியாக மாநிலத்தில் உள்ள ஏரிகளை தூர் வாருதல், வரத்துக் கால்வாய்களை ஆழப்படுத்தல், ஏரிகளை சீரமைத்திடல், தடுப்பணைகள் கட்டுதல்,  ஏரி மற்றும் குளங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செயல்படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆக்கப்nullர்வமான திட்டங்களை தீட்டி நிறைவேற்றி  வருகிறது.  அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து மாரநாடு ஏரி மற்றும் 9 ஏரிகளுக்கு நீnullர் வழங்க, 12 கோடியே 85 லட்சம் ரூபாய்  செலவில் இலாடனேந்தல் கிராமத்தில் ஒரு படுகை அணை கட்டுதல், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து பார்த்திபனூர் பெரிய மற்றும் சிறிய ஏரி, வன்னிக்குடி ஏரி மற்றும் இரண்டு ஏரிகளுக்கு nullநீர் வழங்குவதற்காக ஆத்தூர் கிராமத்தில் 16 கோடி ரூபாய் செலவில் படுகை அணை கட்டுதல், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், எலமனூர் கிராமத்தில் மேலணையின் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு நீnullரை திருப்பி விடுவதற்காக, காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள மேலணையின் கதவுகளை, 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில்  சீராக்குதல், சென்னை நகரின் குடிநீnullர்த் தேவையை nullர்த்தி செய்வதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நதி nullநீரை சேமிக்க, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், திருக்கண்டலம் கிராமத்தின் அருகே கொரட்டலையாற்றின் குறுக்கே,  35 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டுதல், அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டத்தில் உள்ள மருதையாற்றின் குறுக்கே அம்பலவார்கட்டளையிலிருந்து சுண்டக்குடி சாலை வரை கி.மீ. 3/2-​ல்  10 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுதல், தூத்துக்குடி மாவட்டத்தில் பேய்குளம், பொட்டைகுளம் மற்றும் கோரம்பள்ளம் ஆகிய ஏரிகளை, 20 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்துதல், வடசென்னை, எண்ணூர் அதிவிரைவு சாலையின் அருகே சின்னக்குப்பத்தில் பழுதடைந்துள்ள கடலரிப்பு தடுப்புச் சுவர்களை 25 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சீரமைத்தல் என மொத்தம் 98 கோடியே 67 லட்சத்து 60 ஆயிரம் செலவில்  பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் ஏரிகளில் நீnullர் சேகரிப்பு அதிகரிப்பதினால், விவசாயிகள் உணவு பொருட்கள் பயிரிடுவதற்கு  தொடர்ந்து நீnullர் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.  இதன் மூலம் உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony