முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து சென்ற ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, பிப். 7 - ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜேத் மீது கெய்ரோவில் ஷூ வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடந்த 30 ஆண்டுகளில் எகிப்துக்கு ்ஈரான் தலைவர் யாரும் போனதில்லை. இந்த நிலையில், அகமதிநிஜேத் கெய்ரோ வந்துள்ளார். இரு நாடுகளுக்கும் தொய்வடைந்து போயுள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் ்ஈரான் அதிபர். இருப்பினும் அவர் அங்கு எதிர்பாராத வரவேற்பை சந்திக்க நேரிட்டது. 

சன்னி பிரிவு முஸ்லீம்கள் அகமதிநிஜேத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். சிரியா அதிபர் பாஷர் அசாத்துக்கு ஆதரவாக ்ஈரான் இருப்பதைக் கண்டித்து இந்தப் போராட்டம் கிளம்பியுள்ளது. கெய்ரோவில் உள்ள பழமையான மசூதிக்கு அகமதிநிஜேத் வந்த போது பெரும் கூட்டமாக திரண்ட போராட்டக்காரர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்.

அப்போது ஒருவர் தனது ஷூக்களைக் கழற்றி ்ஈரான் அதிபரை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் பலர் ஷூக்களைக் கழற்றி அகமதிநிஜேத்தை நோக்கி உயர்த்திப் பிடித்து ஆவேசமாக குரல் எழுப்பினர். அவர் மேலும் முன்னேற விடாமல் தடுக்கவும் முயன்றனர். இதையடுத்து போலீசார் தலையிட்டு போராட்டக்காரர்களிடமிருந்து பத்திரமாக அகமதிநிஜேத்தை அழைத்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago