முக்கிய செய்திகள்

புதுவை கவர்னரிடம் மீண்டும் விசாரணை

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      ஊழல்
Hasan Iqbal

புதுச்சேரி,ஏப்.22 - கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஹசன் அலியை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க புதுவை கவர்னர் பரிந்துரை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புதுவை கவர்னர் இக்பால்சிங்கிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்தது. நேற்று முன்தினம் காலையில் இக்பால்சிங்கிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், இது முதல் கட்ட விசாரணை தான் என்றும் அதிகாரிகள் மீண்டும் திங்கட்கிழமை கவர்னரிடம் விசாரணை செய்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக டெல்லி, மும்பையில் இருந்து அமலாக்க பிரிவு அதிகாரிகள் புதுவை வருகிறார்கள். அவர்கள் கவர்னரிடம் நேரடியாக விசாரிப்பார்கள் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: