சென்னையில் 15-16 தேதிகள் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.13 - 14 ஆவது சுற்றுச்சூழல் அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம், 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள்  15 மற்றும் 16 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.  டான் (சார்க் மற்றும் மலைப்பிரதேசம்), மாலித்தீவுகள் (ஆப்பிரிக்கா), அர்ஜென்டினா, லத்தீன் அமெரிக்கா,  ஃபியூஜித் தீவுகள் (ஜி 77​தலைமை),  நாரு மற்றும் கத்தார், பிரேசில்  மற்றும் சீனா  ஆகிய நாடுகளின்  சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டம் பிப்ரவரி 16 ஆம் நாள் நடைபெற உள்ளது.  

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இவ்வமைப்பு 4 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டு, பருவ நிலை மாறுதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.  பருவ நிலை மாறுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட உள்ள சாதக பாதக நிகழ்வுகளை இவ்வமைப்பு இணைந்து வளர்ந்து வரும் நாடுகள் சார்பில் எதிரொலிக்க உள்ளது.  

இவ்வமைப்பு ஆண்டிற்கு நான்கு முறை கூடி விவாதிக்கவுள்ளது.  ஒவ்வொரு நாட்டிலும் இவ்வமைப்பின் கூட்டம் சுழற்சி முறையில் நடைபெற உள்ளது. முன்னுதாரணமாக இவ்வமைப்பின் முதல் கூட்டம் இந்தியாவின் சென்னை மாநகரத்தில் நடைபெற உள்ளது.  

சென்னையில் நடைபெறும் இவ்வமைப்பின் கூட்டத்தில்,  தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்கப்படும்.  உலகளாவிய செயல்பாடுகளை எதிர் காலத்தில் மேற்கொள்ள  (டர்பைன் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்) நடவடிக்கை எடுக்கப்படும்.  

டர்பைன் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பருவ நிலை மாறுதல் தொடர்பான பிரச்சினைகளை இவ்வமைப்பு விவாதிக்க உள்ளது,  உலகளாவிய நோக்கத்தினை அடையும் வகையில், சர்வதேச அளவிலான ஒவ்வொரு துறை வாரியாக எடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளையும், பொறுப்புகளையும் இவ்வைமப்பின் கூட்டத்தில் விவாதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.  மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டு சீரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வமைப்பின் கூட்டத்திற்கு முன்னதாக நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் கூட்டம் (15.02.2013) அன்று சென்னையில் நடைபெறும்.   

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இவ்வமைப்பின் (உறுப்பு நாடுகளின்) சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ஜி​77 மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் மற்றும் சீன நாட்டின் பிரதிநிதியையும் இவ்வமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டான் (சார்க் மற்றும் மலைப்பிரதேசம்), மாலித்தீவுகள் (ஆப்பிரிக்கா), அர்ஜென்டினா (லத்தீன் அமெரிக்கா),  ஃபியூஜித் தீவுகள் (ஜி 77​தலைமை),  நாரு மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இவ்வமைப்பின் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஜெனீவா மாநகரத்தில் வரும் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி  27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா சார்பில் வளர்ந்து வரும் நாடுகளின் பிரச்சினைகளும், தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள செயல்பாடுகளும் விவாதிக்கப்படும். இவ்வமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் உறுப்பு நாடுகளால் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களையும் நிறைவேற்ற இந்திய அரசு உதவி செய்யும். வரும் 2020-​ல் ஒளி மயமான எதிர்கால திட்டங்களை சாதிக்கும் வகையில் இவ்வமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: