ஆசிட் வீ சப்பட்டதில் பலியான வினோதினி உடல் தகனம்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

தரங்கம்பாடி, பிப். 15 - ஒரு தலைக் காதலால் ஆசிட் வீ சப்பட்டதில் பலியான என்ஜீனியர் வினோதினியின் உடல் சொந்த ஊரில் நேற்று காலை தகனம் செய்யப்பட்டது. காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்த ஜெயபால் மகள் வினோதினி. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். இவரை திருவேட்டக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் ஒருதலையாக காதலித்து வந்தார். காதலை ஏற்க வினோதினி மறுத்ததால் அவர் மீது சுரேஷ் ஆசிட் வீசினார். இதில் பலத்த காயமடைந்து கடந்த 3 மாதங்களாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி உயிரிழந்தார். 

அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வினோதினியின் உடல் வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, இயக்குனர்கள் அமீர், கவுதமன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வினோதினியின் உடல் சொந்த ஊரான திருக்கடையூருக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு எம்.எல்.ஏ. நாஜீம், முன்னாள் எம்.எல்.ஏ. ஒமலிங்கம் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 10 மணியளவில் வினோதினியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீஞ்சாங்குளக்கரையில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தந்தை ஜெயபால் தீ மூட்டினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: