Idhayam Matrimony

2013 ஆசிய தடகள போட்டி: முதல்வர் ஆலோசனை

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - சென்னையில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டி குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆசிய தடகள போட்டியை சென்னையில் சிறப்பாக நடத்த தேவையான முன் ஏற்பாடுகளை செய்வது குறித்து முதல்வர் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கினார். விளையாட்டு வீரர்களின் தங்குமிடம் வசதி, பாதுகாப்பு ஆகியன குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அவர்களுக்கு தேவையான உணவுகள் ஏற்பாடு செய்வது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் உபசரிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.

நேற்று 13.2.13 தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சி அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், மற்றும் நிதித்துறை முதன்மை செயலாளர், விளையாட்டு துறை செயலாளர், விளையாட்டு மேம்பாட்டு நிறுவன உறுப்பினர் மற்றும் உயர் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago