முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் குண்டுவெடிப்பு: 37 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், பிப். 19 - ஈராக்கில் நடந்த தொடர் கார் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லீம்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களின் உச்சக்கட்டமாக பாக்தாத்தில் பல்வேறு இடங்களில் கார் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. பெரும்பாலான குண்டு வெடிப்புகள் புறநகரில் உள்ள சந்தைகளில் நிகழ்ந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 37 பேர் உயிரிழந்துள்ளநர். 

தாத்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் தாக்குதல் முறைகளை வைத்து பார்க்கும் போது சன்னி பிரிவை சேர்ந்த பயங்கரவாதிகள்தான் இதை நடத்தியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. கார் குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் கார் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பாக்தாத்தில்தான் அதிக தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago