எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, பிப்.20 - பிரபாகரன் இளைய மகனை சுட்டுக்கொல்வதற்கு முன்பாக இலங்கை ராணுவம் சிறை வைத்திருந்ததை சானல்4 ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இறுதிக்கட்டபோர் நடந்தது. அதில் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மூத்தமகன், மகள், இளையமகன் பாலசந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர். இறுதிக்கட்டப்போரின் போது 1லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் குண்டுவீசி கொல்லப்பட்டனர். பிடித்துச்செல்லப்பட்ட விடுதலைப்புலிகள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தின் கொடூர தாண்டவங்களை தொகுத்து இங்கிலாந்தின் சானல்4 என்ற டிவி ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டது. இது உலகம் முழுவதும் மக்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது. இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்தது. கிராபிக்ஸ் செய்து மிகைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. இறுதிக்கட்டப்போர் முடிவின் போது பிரபாகரனின் இளையமகன் 12 வயது பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட படம் வெளியாகியிருந்தது. ஆனால் அவன் எப்படி இறந்தான் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவனை பிணைக்கைதியாக பிடித்துச்சென்ற இலங்கை ராணுவம் ஈவு இரக்கமின்றி 5 தடவை மார்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது என்பது தெரியவந்துள்ளது. அதற்கான போட்டோக்களை ஆதரத்துடன் சானல்4 டிவி வெளியிட்டது.
பிணைக்கைதியாகும் முன்பு பாலச்சந்திரனுக்கு 5 விடுதலைப்புலிகள் காவலாக இருந்துள்ளனர். பாலச்சந்திரனுடன் சேர்த்து அவர்களையும் இலங்கை ராணுவம் பிடித்துச் சென்றது. பின்னர் விடுதலைப்புலிகள் 5 பேரின் கைகளை கட்டி தலையில் சுட்டு கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் பாலச்சந்திரனை ராணுவத்தின் கட்டுபாட்டில் உள்ள இடத்தில் மணல் மூட்டைகளுக்கு நடுவில் உட்காரவைத்தனர். சட்டை கூட அணியாமல் லுங்கியைப் போர்த்திய நிலையில் காயங்களுடன் பரிதாபமாக அமர்ந்திருக்கும் பாலச்சந்திரனுக்கு சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர். அதைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பாலச்சந்திரனை ராணுவ வீரர்கள் டிஜிட்டல் கேமிராவில் போட்டோ எடுத்துள்ளனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து பாலச்சந்திரனை கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அதையும் அதே டிஜிட்டல் கேமிராவில் போட்டோ எடுத்துள்ளனர். பிணமாக கிடக்கும் பாலச்சந்திரனின் மார்பில் 3 துப்பாக்கிக்குண்டுகள் துளைத்துள்ளன. அவனை 2அடி தூரத்திலிருந்து சுட்டுக்கொலை செய்திருப்பார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவரின் பாதுகாவலர்கள் அவரது கண் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ள சேனல்4 பிரபாகரன் இளையமகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் நோ வார் ஷோன் என்ற பெயரில் விரைவில் புதிய ஆவணப்படம் ஒன்றை சேனல்4 வெளியிட உள்ளது. ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது அமெரிக்கா கொண்டு வந்த போர்க்குற்றம் சம்பந்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் சேனல்4 தற்போது வெளியிட்டுள்ள பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரனின் போட்டோக்கள் மற்றும் வெளியாக இருக்கும் சேனல்4 ஆவணப்படம் இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராஜபக்சேவும் அவரது தம்பியும் ராணுவ மந்திரியுமாமன கோதபய ராஜபக்சேவும் கடும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
01 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
- வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
- சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
-
இன்றைய ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
01 Feb 2026


