இந்தியா - நேபாளம் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

மகராஜ்கஞ்ச், பிப்.24 - இந்திய-நேபாள எல்லையில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்க உத்தரபிரதேச மாநில அரசு, சாஸ்ஹஸ்டிரா பால் (எஸ்.எஸ்.பி.) ஆகிய இரண்டும் கண்காணிப்புப் பணிகளை பலப்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    எல்லையைக் கடந்து செல்பவர்களிடம் அவர்களது ஆதாரங்களை கேட்டு அவர்களை பரிசோதித்து உறுதிசெய்து அனுப்புமாறு பாதுகாப்பு எஜென்ஸிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று எஸ்.எஸ்.பி.கமாண்டன்ட் பங்கோதி கூறினார். இதுபற்றி அவர் மேலும்கூறியதாவது:

 மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில், நேபாளம் செல்லும் ஒவ்வொரு சாலையிலும், அதிநவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.  முக்கிய சாலைகள் தவிர மற்ற இடங்களிலும் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தலை தடுக்கும் வகையில் துப்பறியும் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு நாய்களைப் பயன்படுத்துவதால் குற்றச்செயல்கள் குறைந்து  நிவாரணம் கிடைத்துள்ளது.

 சாவடிகள் அனைத்தும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. தேச விரோத சக்திகள் புகுந்து விடாமல் தடுக்க பதட்டமான பகுதிகளில் ரோந்து எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லைப் பகுதியில் உஷாராக இருக்குமாறு பாதுகாப்பு ஏஜென்ஸிகளான இந்திய-நேபாள எல்லைப் போலீஸார், உள்ளூர் புலனாய்வுத் துறையினர் மிக எச்சரிக்கையுடன் இருந்து செயல்படுமாறு கோரப்பட்டுள்ளனர். நேபாள போலீஸாருடன், எஸ்.எஸ்.பி. தனது பணிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர எல்லையில் உள்ள மதம் தொடர்பான வழிபாட்டுத் தலங்கள் மீதும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.                 

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, ஹோட்டல்கள், ரயில், பஸ் நிலையங்கள் முக்கியமான இடங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். ஹைதராபாத் போன்று அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் எல்லா வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: