முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்துக்கு விலக்கு அளிக்க முடியாது: ஐகோர்ட்

புதன்கிழமை, 6 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - அவதூறு வழக்கில் ஆஜராக விஜயகாந்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிவகங்கையில் 8.8.2012 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையவில்லை என்றும், முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசினார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் சிவகங்கை கோர்ட்டில் விஜயகாந்த் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நேரில் ஆஜராக விஜயகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

திருவண்ணாமலையில் 28.8.2012 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக விமர்சனம் செய்ததாக விஜயகாந்த் மீது திருவண்ணாமலை கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த 2 வழக்குகளையும் ரத்து  செய்ய வேண்டும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை கோர்ட்டில் விஜயகாந்த் மனுதாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி ராஜேஸ்வரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அவதூறு வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து உத்தரவிட முடியாது. அது சம்பந்தமான மனுவை கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்து விஜயகாந்த் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். மனுவை 4 வாரம் தள்ளி வைக்கிறேன். அதற்குள் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்