முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல நகரங்களில் ரயில் நிலையங்களை தாக்க சதி

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.18 - டெல்லி,மும்பை உள்பட நாட்டில் பல முக்கிய ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தீவிரவாதிகள் அப்சல்குரு, அஜ்மல் கசாப் ஆகிய இருவரையும் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் செயல்களில் தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமை தாக்கியதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். தற்போது டெல்லி, மும்பை, சண்டிகார், பிரதாப்கர், மீர்ஜாபூர் ஆகிய நகரங்களில் உள்ள ரயில்நிலையங்களை தாக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கமானது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ரயில்வே நிலையங்களில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த ரயில் நிலையங்களை லஷ்கர்-இ-தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானில் இருந்துகொண்டு 2 தீவிரவாதிகளை கடந்தாண்டு அனுப்பி நோட்டம் பார்த்துவரச்செய்திருப்பதும் புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பல போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தீவிரவாதிகள் ஷோயப் அஹமத் மீர்ஷா, அப்துல் ஹக்கீம் ஜமாதர் ஆகியோர்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூர் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய 12 பேர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் மீர்ஷாவும் அவனுடைய தொடர்புடைய இம்ரான் என்பவரும் அந்த 5 நகரங்களில் உள்ள ரயில்வே நிலையங்கள் மற்றும் அங்கு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணித்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதல் திட்டம் குறித்து தகவல் தெரிந்திருந்தாலும் எந்த அளவுக்கு இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் இந்த தாக்குதல் நடத்துவது குறித்து தீவிரவாத இயக்கங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அடிக்கடி தகவல் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்