முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் அணிகள் ரூ.500 கோடி அளிக்க சிவசேனை கோரிக்கை

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மார்ச்.19 - வறட்சியால் பாகிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்கு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ரூ.500 கோடி அளிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது.பெரும் தொழில் அதிபர்களும், பாலிவுட் நடிகர்களும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர்.

நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் கிடைக்கும் வருமானத்திலிருந்து நிவாரணப் பணிகளுக்காக குறைந்தபட்சம் ரூ.500 கோடியை அளிக்க ஐபிஎல் அணிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனை கட்சி செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவுத் கேட்டுக்கொண்டார். அவர் மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்வாடா பகுதி கடும் நீர்ப்பற்றாக்குறையை சந்தித்துள்ளது.  மராத்வாடா, மகாராஷ்டிரத்தின் வடக்கு, மேற்குப் பகுதியில் மீண்டும் நீர்ப்பாசனம் ஏற்படுத்தவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும், மாநிலத்துக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. ஐபிஎல் போட்டி வர்த்தக அடிப்படையில் நடத்தப்படுகிறது. மாநிலம் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் நிதி அளித்து தங்களின் பொறுப்புணர்வை ஐபிஎல் அணிகள் நிரூபிக்க வேண்டும். இதுதொடர்பாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடம்  மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார், மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவாண் ஆகியோர் கோரிக்கை விடுக்க வேண்டும்.

 இதற்கு அணிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் ஐபிஎல் போட்டிகளை மகாராஷ்டிர மாநிலத்தில் நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது. இதனை மாநில அரசு செய்யத் தவறினால் சிவசேனை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்