அமெரிக்காவின் புதிய வரைவு தீர்மானம் விடியல் தராது

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

ஜெனிவா, மார்ச். 20 - இலங்கைக்கு எதிரான தீர்மானமாக பேசப்பட்டாலும் கூட ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய வரைவுத் தீர்மானமும் கூட ்ஈழத் தமிழர்களுக்கு பெரிய அளவில் விடியலையோ அல்லது விமோச்சனத்தையோ கொண்டு வந்து விடாது என்றே கூறப்படுகிறது. காரணம், இந்த தீர்மானத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் முக்கியக் கோரிக்கையான இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவிலான சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருப்பது இது 2 வது முறையாகும். முதல் தீர்மானம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளானது. தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டத்திற்குப் பின்னரே இந்த தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு முன்வந்தது. தற்போது 2வது தீர்மானத்திற்கும் கூட மத்திய அரசு இதுவரை அமைதியாக கம்மென்றுதான் இருக்கிறது. இப்போதும் தமிழகத்தில் பெரும் போர் வெடித்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு மாணவர்களின் கிளர்ச்சி வெடித்துள்ளது. இதனால் மத்திய அரசு அதிர்ந்து போயுள்ளது. மேலும் மாணவர்களின் கிளர்ச்சி பெரும் மக்கள் போராட்டமாகவும் மாறி வருவதால் மத்திய அரசு மெளனம் கலைத்தே ஆக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: