முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலை நடத்த தயார் நிலையில் உள்ளோம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.23 - நாடாளுமன்றத் தேர்தலை எந்த நேரத்திலும் நடத்த தயாராக உள்ளோம் என்று இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி சம்பத் கூறியுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் நேற்று முன்தினம் நள்ளிரவு டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம்  கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும் தேர்தலை நடத்த ஆயத்தமாக இருக்கிறோம். இதற்காக ஜனவரி மாதம் வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி 100 சதவீதம் முடிந்து உள்ளது. மற்ற மாநிலங்களில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளது.

இந்த பணியை முழுமையாக நிறைவு செய்ய திட்ட மிட்டு உள்ளோம். வண்ண புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பான் கார்டு வடிவில் வழங்க திட்டமிட்டு உள்ளோம். ஆனால் இதற்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டும். இந்த தொகையை தேர்தல் ஆணையம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்த தொகையில் ஒரு பங்கு மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் குற்றங்களில் ்டுபடுபவர்கள் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்ற ஆலோசனையை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளோம். இது பற்றி மத்திய அரசு தான் மசோதா நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்