நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி

வியாழக்கிழமை, 28 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், மார்ச்.29 - தென் ஆப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா, நுரையீரல் தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தென் ஆப்பிரிக்க அரசு அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த தலைவரும், முன்னாள் அதிபருமான 94 வயது மண்டேலா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்று அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் சுமா தெரிவித்துள்ளார்.         

நுரையீரல் தொற்று நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், அவருக்கு டாக்டர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் சுமா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மண்டேலா விரைந்து குணமடைய வேண்டும் என்றும் இதற்காக தென் ஆப்பிரிக்க மக்களும். உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் சுமா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: