இலங்கையில் தமிழ்த் படங்களை பண்ண பிட்சுகள் கோரிக்கை!

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

கொழும்பு, ஏப். 10 - இலங்கையில் தமிழ் திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்று புத்த பிட்சுகள் அமைப்பான ராவண சக்தி என்ற இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கை திரைப்பட நிறுவன அதிகாரிகளிடம் ராவண சக்தி இயக்கத்தின் செயலாளர் இத்தெபனெ சத்தாசியா தலைமையில் நேற்று பிட்சுகள் குழு நேரில் சென்று நேரில் வலியுறுத்தியது. இலங்கையின் இறையாண்மை மீது தமிழகம் செல்வாக்கு செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தடையை விதிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. இந்த அமைப்புதான் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள இந்தியா சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 3 ம் தேதி இலங்கை கிரிக்கெட் கவுன்சில் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: