முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.1000 குறைந்தது

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஏப்.16 - அமெரிக்க டாலர் மதிப்பு, கச்சா எண்ணை விலை, சர்வதேச பங்கு சந்தை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் சுணக்க நிலை போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச பங்கு சந்தையில் ஏறபடும் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கும் தங்கத்தின் விலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் போது தங்கத்தின் விலை அதிரடியாக உயரும். அதேபோல எழுச்சி ஏறபடும் போது விலை குறையும். 

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் அதிரடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதியில் இருந்தே தஙகத்தன் விலை இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் நேற்று மேலும் சரிவு ஏற்பட்டது. ஒரு பவுனுக்கு  ரூ.488 குறைந்தது. சனிக்கிழமை ஒரு கிராம் விலை ரூ2632.ஆக இருந்தது.  ஞாயிறு விடுமுறை என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று அது குறைந்து ரூ.2568 க்கு விற்கப்பட்டது. கடந்த 3 தினங்களில் ரூ. 1512 கிராமுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ந்கைக்கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.488 குறைந்துளளது. 

மதுரையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,571க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 568க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சரிவு நடுத்தர மற்றும் ஏழை பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. அதிரடி சரிவால் நேற்று நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்