முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மீனவர்கள் கொலை வழக்கு: இத்தாலி கடும் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.17 - கேரள மீனவர்கள் 2 பேரை இத்தாலிய கப்பல் பாதுகாவர்கள் சுட்டுகொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டில் இத்தாலிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கொலை வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கேரள கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்த மீனவர்கள் மீது அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்கள் மஸ்ஸிமிலியனோ, சல்வதோரே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைவில் முடிப்பதற்காக வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய அரசு மாற்றி உள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி அல்டாமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்சில் நடைபெற்றது. அப்போது இத்தாலி அரசு சார்பாக பிரபல வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார். மத்திய அரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகனவதி ஆஜரானார். விசாரணையின்போது இத்தாலி நாட்டு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடுகையில் இந்த கொலை வழக்கில் இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தேசிய புலனாய்வு அமைப்பின் வரம்பிற்குள் வரவில்லை. கடல் நடவடிக்கைகள் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்துதான் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த முடியும் என்றார். இதற்கு மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாகனவதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்த முடியும் 60 நாட்களுக்குள் இந்த விசாரணை முடிந்துவிடும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்டாமஸ் கபீர் அடுத்த விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago