திருப்பூரில் கற்பழிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவ ரெடி

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்: ஏப் - 25 - திருப்பூர் அருகே கற்பழிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவ தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். திருப்பூர் அருகே 8 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயார் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். இந்த பிரச்சனை குறித்து நேற்று கேரள சட்டசபையில் பேசப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தன் சட்டசபையில் இந்த பிரச்சனையை எழுப்பினார். ஆதரவற்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியை கேரளாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், சிறுமியின் சிகிச்சைக்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது. இது குறித்து தமிழக அரசை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: