ஐதராபாத் பல்கலை.யில் விருதுநகர் மாணவர் தற்கொலை

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், மே. 4 - ஐதராபாத்தில் பிஎச்டி பட்டம் பெற ஆய்வில் ்ஈடுபட்டிருந்த விருதுநகரைச் சேர்ந்த மாணவர் தேர்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத்தில் உள்ள அரபு மொழி குறித்து பி.எச்.டி ஆய்வில் ்ஈடுபட்டிருந்தவர் விருதுநகரைச் சேர்ந்த மொகியுதீன் (33). இவரது ஆய்வு முடிந்து விட்ட நிலையில் நேற்று முன்தினம் இறுதித் தேர்வு நடக்க இருந்தது. இந்த நிலையில் பல்கலைக் கழகத்துக்கு அருகே உள்ள மசூதி அருகே இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தமிழில் அவர் எழுதியிருந்த தற்கொலைக் கடிதத்தில், நான் எனது வாழ்க்கையையே வீணாக்கிக் கொண்டேன். மன அழுத்தம் தாங்க முடியவில்லை. எனது மரணம் குறித்து என் தங்கையிடம் தெரிவிக்க வேண்டாம் என்று எழுதப்பட்டுள்ளது. இவரது நேர்காணலை பல்கலைக்கழகம் வேண்டுமென்றே பலமுறை தாமதப்படுத்தி வந்ததால் தான் அவர் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டு விட்டதாக சக மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். 

மேலும் இவரது உடலைப் பார்க்க கூட போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், உடலை போஸ்ட்மார்ட்டம் முடித்து உடனுக்குடன் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மொகியுதீனின் பெற்றோர் மரணமடைந்து விட்டனர். சென்னை விமான நிலையத்தில் இவரது உடலை அவரது சகோதரியும் இரு சகோதரர்களும் பெற்றுக் கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பி.எச்.டி மாணவரும் இதே பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: