பெங்களூரில் குண்டுவெடிப்பு: 2 பேர் கேரளாவில் கைது

Image Unavailable

 

திருச்சூர்,மே.13 - பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சேர்த்து இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டியிருந்தபோது கடந்த மாதம் 17-ம் தேதி நகரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் அருகே குண்டுவெடித்தது. இதில் 11 போலீசார் உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சுல்பிகர் அலி (22), ஷபீர் (24) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கோவையில் இருந்து கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குன்னம்குளம் கெச்சேரியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது அவர்களை தமிழகம் மற்றும் கர்நாடக  போலீசார் குழு அங்கு சென்று நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரும் அங்கு பதுங்கி இருப்பதை செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.  இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ