முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் விடுவிப்பு

சனிக்கிழமை, 25 மே 2013      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே. 26 -- கராச்சியில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 45 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது. எனினும் அவர்கள் விடுதலை பற்றி முன்கூட்டியே இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததால் குழப்பம் நிலவுகிறது. 

கராச்சியில் உள்ள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பஸ் ஒன்றில் லாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் பலரின் விவரங்களோ அவர்களது அடையாளமோ இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிலர் இன்னும் சிறை தண்டனை காலத்தையே முடிக்காதவர்கள். வாகா எல்லை பகுதி வழியாக அவர்கள் இந்தியா திரும்புவதற்கு முன் பல நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதுள்ளது. இந்த நடைமுறைகள் முடியாமல் மீனவர்கள் இந்தியா திரும்ப முடியாது. 

கடந்த மே மாதம் 7 ம் தேதி பாகிஸ்தான் இடைக்கால அரசின் பிரதமர் மீர் ஹாசர் கான் கோசோ சிறை தண்டனை காலத்தை முடித்து விட்ட இந்திய மீனவர்கள் 51 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். எனினும் 45 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இப்போதைய நிலையில் பாகிஸ்தான் சிறைச் சாலைகளில் 482 இந்திய கைதிகளும், இந்திய சிறைச்சாலைகளில் 496 பாகிஸ்தான் கைதிகளும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்