முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் ஆட்சியை கலைத்து பாருங்கள்! காங்.,க்கு மம்தா சவால்

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பல்லி, மே. 29 - தொடர்ந்து 34 ஆண்டுகளாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ்டுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ள மம்தா பானர்ஜி, முடிந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தி என் ஆட்சியை கலைத்துப்பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்க ஹெளரா நாடாளுமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடை பெற உள்ளது. இதற்காக திரிணாமுல் காங்கிரசின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அங்கு பிரச்சாரத்தில் உள்ளார். பிரச்சாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மம்தா கூறியதாவது, 

மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. எங்களுக்கு எதிராக சி.பி.ஐ-யை ஏவி விட்டு மிரட்டல் விடுத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறிய பிறகு எங்கள் மீது பழிவாங்கும் போக்கை காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்து வருகிறது.

எனது அரசுக்கு எதிராக காங்கிரசும், சி.பி.ஐ-எம் கைகோர்த்து செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களின் சதித்திட்டம் செல்லுபடியாகது. கடந்த 34 வருடங்களாக நான் மிரட்டப்பட்டு வருகிறேன். முடிந்தால் நீங்கள் ஆர்.டி.க்கள் 356 பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்து பாருங்கள். ஆனால் அவர்களின் சதித்திட்டத்தை நாங்கள் முறியடிப்போம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டு முறை நாட்டை ஆண்டு இருக்கலாம். ஆனால் மூன்றாவது முறையாக அவர்கள் நாட்டை ஆள விடமாட்டோம். இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்