முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனிவாசனுக்கு ஆதரவாக தமிழக வாசகர்கள் கருத்து

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

பெங்களூர், மே. 29 - ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் பதவி விலகத் தேவையில்லை என்று ஒன்இந்தியா இணையதளத்தின் தமிழ் பதிப்பு வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், கர்நாடகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் சீனிவாசன் விலக வேண்டும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழக வாசகர்கள் மத்தியில் சீனிவாசனுக்கு ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம் நாட்டின் பிற பகுதிகளில் எதிர்ப்பே நிலவுகிறது.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, சீனிவாசனுக்கு எதிராக 7603 பேரும், ஆதரவாக 5287 பேரும் வாக்களித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்