முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

புதன்கிழமை, 29 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

லீட்ஸ், மே. 30 - நியூசிலாந்திற்கு எதிராக லீட்சில் நடை பெற்ற 2- வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 247 ரன் வித் தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில், ஜோ ரூட் முதல் இன்னிங்சிலும், கேப்டன் கூக் 2-வது இன்னிங்சிலும் சதம் அடித்தனர். அவர்களுக்கு பக்கபலமாக ஆடிய  பேர் ஸ்டோ மற்றும் டிராட் இருவரும் அரை சதம் அடித்தனர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணிசுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் கைப்பற் றினார். அவருக்கு ஆதரவாக, பின், பிராட் , மற்றும் ஆண்டர்சன் ஆகி யோர் பந்து வீசினர். 

நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் தலைமையில் இங்கிலா ந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் அலிஸ்டார் கூக் தலைமையி லான அணிக்கு எதிராக விளையாடி யது. 

இரு அணிகளுக்கு இடையே 2 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்த து. இதன் 2- வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதா  னத்தில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன் னிங்சில் 99 ஓவரில் அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 354 ரன்னை எடுத் தது. 

ஜோ ரூட் 167 பந்தில் 104 ரன் எடுத்தார். தவிர, பேர்ஸ்டோ 64 ரன்னையும், பிரையர் 39 ரன்னையும், கேப்டன் கூக் 34 ரன்னையும், டிராட் 28 ரன்னையும், பெல் 30 ரன்னையும், ஸ்வான் 26 ரன் னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய நியூசி லாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும்இழந்து 174 ரன்னில் சுருண்டது. துவக்க வீரர் புல்டான் அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார். 

தவிர, ரூதர்போர்டு மற்றும் வாக்னர் தலா 27 ரன்னையும், போல்ட் 24 ரன் னையும், கேப்டன் மெக்குல்லம் 20 ரன் னையும், செளதீ 19 ரன்னையும் எடுத் தனர். 

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 76 ஓவரில் 5 விக்கெ ட் இழப்பிற்கு 287 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் கூக் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். அவர் 190 பந்தில் 130 ரன் னை எடுத்தார். தவிர, டிராட் 76 ரன் னையும், ரூட் 28 ரன்னையும், பேர்ஸ் டோ 26 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 468 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 76.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 220 ரன்னில் சுருண்டது. 

இதனால் இந்த 2-வது டெஸ்டில் இங்கி லாந்து அணி 247 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நியூசிலாந்து அணி தரப்பில், டெய்லர் அதிகபட்சமாக 121 பந்தில் 70 ரன் எடு த்தார். தவிர, ரூதர்போர்டு 42 ரன்னையும், புரவுன்லி 25 ரன்னையும், செளதீ 38 ரன்னையும், போல்ட் 24 ரன்னையு ம், பிரேஸ்வெல் 19 ரன்னையும் எடுத் தனர். 

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக ஜோ ரூட் தேர்வு செ ய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்