ஆந்திர சட்டசபையை முற்றுகையிட நக்சலைட் அழைப்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

நகரி,ஜூன்.13 - ஆந்திர சட்டசபையை முற்றுகையிடவும், புரட்சி போராட்டம் நடத்தவும் நக்சலைட் இய்க்கம் அழைப்பு விடுத்துள்ளது. தனித்தெலுங்கானா அமைக்ககோரி தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வருகிற 14-ம் தேதி ஆந்திர சட்டசபையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வட தெலுங்கானா பகுதி மாவோயிஸ்டு இயக்கத்தை சேரந்த சிறப்பு மண்டல் கமிட்டி அதிகார பிரதிநிதி ஜெகன் பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தெலுங்கான கூட்டு நடவடிக்கை குழுவினர் வெறும் பேரணி நடத்தினால் மட்டும் போதாது. அவர்கள் யுத்தத்திற்கு தயாராகவேண்டும். சட்டசபையை முற்றுகையிட வேண்டும். புரட்சி போராட்டம் நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அழைப்பு விட்டிருந்தார். இதையடுத்து தெலுங்கான கூட்டு நடவடிக்கை குழு பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர். சட்டசபையை சுற்றி 3000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சட்டசபைக்கு 2கி.மீட்டர் தூரம் வரையில்  யாரும் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள அனைத்து சாலைகளும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய பாதுகாப்பு படையையும் வரவழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்ள், மற்றும் அமைச்சர்கள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் பேரணிக்கு தடை விதிக்கக்கூடாது. பேரணியை அமைதியாக நடத்துவது எங்கள் பொறுப்பு  என்று கூறியுள்ளனர். ஆனால் முதல்வர் பேரணிக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். இதற்கிடையே தெலுங்கானா தனிமாநிலம் அமையாவிட்டால் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: