முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி: ஆட்டங்களில் இருந்து வார்னர் நீக்கம்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பெர்மிங்ஹாம், ஜூன். 15 - இங்கிலாந்து வீரர் ஜோரூட்டை தாக்கியதற்காக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் இருந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நீக்கப்பட்டார். 

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய  அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. போட்டிக்கு பின் கேளிக்கை விடுதியில் இங்கிலாந்து வீரர் ஜோரூட்டை வார்னர் தாக்கி உள்ளார். வார்னரின் இந்த செயல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிகளை மீறுவதாகும். இதை தொடர்ந்து அவர் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் ரூ. 6.35 லட்சம் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. 

சாம்பியன்ஸ் டிராபியை தொடர்ந்து இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலாந ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஜூலை 10 ம் தேதி முதல் நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வார்னர் தகுதி பெற்றிருந்தார். தற்போது அதில் இருந்தும் நீக்கப்படுவாரா என்று தெரியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியின் போது பத்திரிகையாளர்களை வார்னர் விமர்சித்திருந்தார். இதை தொடர்ந்து அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அபாரதம் விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்