முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை: அரை இறுதியில் இங்கிலாந்து

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கார்டிப், ஜூன். 18 - ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து அணி 10 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக இந்தப் போட்டியின் துவ க்கத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக துவங்கியது. இதனால் இரு அணிகளுக்கும் மொத்த ஓவர்கள் 24 ஆகக் குறைக்கப்பட்டது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் கூக் அபார மாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக் குப் பக்கபலமாக, ஜோ ரூட், மார்கன், பட்லர், இயான் பெல் ஆகியோர் ஆடி னர். 

பின்பு பெளலிங்கின் போது, ஆண்டர் சன், பிரஸ்னன், பொபாரா மற்றும் பிராட் ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற் றியைத் தேடித் தந்தது. 

சாம்பியன்ஸ் கோப்பையின் 11 - வது லீக் ஆட்டம் கார்டிப் நகரில் உள்ள சோபியா கார்டனில் நடந்தது. இதில் குரூப்  ஏ பிரிவைச் சேர்ந்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோ தின . 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 23.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் கூக் அதிகபட்சமாக, 47 பந்தில் 64 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற் றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, ஜோ ரூட் 40 பந்தில் 38 ரன்னையும், மார்கன் 15 ரன்னையும், பட்லர் 14 ரன்னையும், பெ ல் 10 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மில்ஸ் 30  ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கைப் பற்றினார். தவிர, மெக்லினாகன் 3 விக் கெட்டும், வெட்டோரி மற்றும் எல். மெக்குல்லம் தலா 1 விக்கெட்டும் எடுத் தனர். 

நியூசிலாந்து அணி 24 ஓவரில் 170 ரன் னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வைத்த து. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 24 ஓவரில் 8 விக்கெட் இழப் பிற்கு 159 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில், வில்லியம் சன் அதிகபட்சமாக, 54 பந்தில் 67 ரன் னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர ஜே. ஆண்டர்சன் 24 பந்தில் 30 ரன்னையும், எல். மெக்குல்லம் 13 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்ச ன் 32 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடுத்தார். தவிர, பிரஸ்னன் மற்றும் பொபாரா தலா 2 விக்கெட்டும், பிராட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கூக் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்