வங்கி வட்டி விகிதம் அதிகரிப்பு

புதன்கிழமை, 4 மே 2011      இந்தியா
RBI

 

மும்பை,மே.4 - நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடனுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 50 பைசா அடிப்படையில் உயர்த்தப்பட்டு 7.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசியும் உயரும். உணவுப்பொருட்களின் பணவீக்கம் அதிக அளவில் உள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின்விலையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி வங்கி கடனுக்கான வட்டி வகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது. அதேமாதிரி சேமிப்புக்கான வட்டி விகிதம் 50 பைசா அதாவது அரை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் வரை இருக்கும் என்று மத்திய அரசு முதலில் மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் 8 சதவீத அளவுக்குத்தான் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2010-11-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: