மனைவியை கேடயமாக பயன்படுத்திய ஒசமா

Osama-Wife

 

வாஷிங்டன்,மே.5 - உலகையே அச்சுறுத்தி வந்த தீவிரவாதி ஒசமா பின்லேடன் கடைசியில் தனது மனைவியை கேடயமாக பயன்படுத்திய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.ர

அமோதாபாத்தில் தங்கியிருந்த ஒசாமாபின்லேடனை அமெரிக்கப்படைகள் தாக்க முயன்றபோது பின்லேடன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தனது மனைவியை கேடயமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவர்தான் பின்லேடன் என்பதை உறுதிசெய்து அமெரிக்க கமோண்டாக்கள் அவரை சுற்றி வளைத்தபோது அவரது மகனும் தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் இந்த தாக்குதலில் மூவரும் பலியாயினர்.பின்லேடனை மாபெரும் பயங்கரவாதி என சித்தரிக்கப்பட்டு வந்த செய்தி தவறு என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. கமாண்டோக்கள் தன்னை சுற்றி வளைத்ததும் தனது மனைவியை கேடயமாக பயன்படுத்த முயன்றதிலிருந்து அவரது தைரியத்தை உணரலாம் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான்பிரெனன் தெரிவித்துள்ளார். ஒசாமாவுக்கு கூரியர் மூலம் கடிதங்களைக் கொண்டுவந்த 2 ஊழியர்களும் இந்த தாக்குதலில் பலியாகினர். 

இந்த அதிரடி தாக்குதல் சம்பவத்தின் முழு விவரமும் கோரப்பட்டுள்ளது. அவை கிடைத்த பின்னர் அது எப்படி நடத்தப்பட்டது. பின்லேடன் எவ்வாறு இந்த தாக்குதலை சமாளிக்க முயன்றார். அவரது ஆதரவாளர்கள் எப்படி பதில் தாக்குதல் நடத்தினர் என்ற விபரங்கள் தெரிய வரும். கேடயமாக பயன்படுத்தப்பட்ட பின்லேடனின் மனைவி எத்தனாவது, அவர் பெயர் என்ன என்பதும் முழுவிவரம் கிடைத்தபிறகுதான் தெரியவரும் என்று பிரெனன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ