முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனின் மரணம் அமெரிக்காவை ஒருங்கிணைத்துள்ளது: ஒபாமா

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,மே.5 - உலகையே அச்சுறுத்தி வந்த பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டு கொன்றதன் மூலம் அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக இணைந்துள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கு கொண்ட இரவு விருந்தின் போது பேசிய ஒபாமா 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி நமது நாட்டின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட போது நமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது ஒற்றுமையை காண்பித்தனர். அதன் பிறகு அதற்கு காரணமான பின்லேடன் கொல்லப்பட்ட போது அலைகடலென திரண்டு உள்ளீர்கள். அமெரிக்க ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா எந்த பக்கம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து அரசியல் கட்சியினரை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இது போன்ற இரவு விருந்தை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அதற்குரிய தருணம் மிக சரியாக அமைந்து விட்டது என்று ஒபாமா குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காலம் காலமாக இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து பயங்கரவாதத்திற்கு எப்போதுமே அமெரிக்கா எதிரி என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கே ஒன்றுகூடி உள்ளோம். இது போல எதிர்காலத்திலும் ஒன்று திரள்வோம் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்