முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்த கயா குண்டு வெடிப்பு: பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கயா,ஜூலை.10 - பீகார் மாநிலம் புத்தகயா ஆலயத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய ஒரு பெண் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது பிடிபட்டவர்களை சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பினர் பாட்னாவில் இந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். மகாபோதி ஆலய வளாகத்திற்கு அருகே நேற்று காலை சுமார் 6.30 மணி அளவில் ஒரு ஓட்டலில் சோதனையிட்டு இந்த 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைதான 4 பேரும் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. முன்னதாக புத்தர் கோயிலில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து கோயிலுக்குள்ளே ஒரு அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வினோத்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இருந்தாலும் இந்த குண்டுவெடிப்பில் அவரது பங்கு என்ன? என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான உத்தரவும் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தையடுத்து புத்தர்கோயிலை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கடைகளை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்த டைம் பாம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்