மும்பையில் குண்டு வெடிக்கும்: இ.முஜாஹூதீன்

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கயா, ஜூலை.11 - பீகார் மாநிலத்தில் புத்தர் கோவிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு நாங்களே காரணம். எங்களது அடுத்து இலக்கு மும்பை என்று இந்திய முஜாஹூதீன் என்ற அமைப்பு கூறியுள்ளது. இந்த 9 தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று அந்த அமைப்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதுபற்றி டுவிட்டரில் குண்டு வெடிப்புக்கு முன்பு அதாவது மும்பை ஜூலை 6-ம் தேதி என்று வெளியிட்ட அறிக்கையில், அடுத்தாற்போல் மும்பையில் குண்டு வெடிக்கும். உங்களால் முடிந்தால் இதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர்  செய்தி தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. டுவிட்டரில் இப்படி யார் கூறியுள்ளனர் என்பதையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் நாங்கள் உறுதியாகக் கண்டறிவோம் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. நம் நாட்டின் மீது விடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தீவிரவாத மிரட்டல் குறித்தும், அது உண்மையாக அல்லது பொய்யாக இருந்தாலும் சரி அதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்படும் என்று ஒரு  அதிகாரி தெரிவித்தார்.  

இதற்கிடையே கயா ஆலய வளாகத்தில் குண்டு வெடித்த இடத்தில் உள்ள காலடித் தடம் தொடர்பாக சி.சி.டி.வி. செய்தி மூலம் பாட்னா போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.  சுமார் 20 வயதுள்ள ஆனந்த் பிரகாஷ், குஞ்சன்பட்டேல், ஹஸன்மாலிக், பிரியங்கா ஆகியோரை போலீஸார் சந்தேகத்தின்பேரில் போலீஸார பிடித்து வைத்துள்ளனர்.      

இந்த ஆலயத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இவர்கள் ஆலயத்துக்குள் சென்றுள்ளனர். இவர்களது கால் தடம் நன்றாகத் தெரிகிறது என்றும், இதுவே சரியான ஆதாரம் என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.     

மகா போதி கோவிலுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டு வெடித்த சில நிமிடங்களில் அங்கு என்ன நடந்தது, யாரெல்லாம் வந்தார்கள் என்பதையும் இந்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இந்த 4 பேரையும் தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் புனித நகரான புத்த கயாவில் உள்ள மகா போதி கோயிலில் 9 குண்டுகள் வெடித்தன. இதில் 2 துறவிகள் பலத்தக் காயமடைந்தனர். கோவிலில் வெடித்த குண்டுகள் குறைந்த சக்தி கொண்டவை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: