கடன் செலுத்தாதவர்களின் படங்களை ஒட்ட முடிவு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.12 - வங்கிகளில் கடன் வாங்கிய பலர் பணத்தை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இதனால் வங்கியின் ஆரோக்கியம் பாதிப்புக்கு இலக்காகி வருகிறது. கடன்களை வசூலிக்க கடுமையான நடவடிக்கைளை எடுக்குமாறு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே வங்கிகள் கடனை வசூலிக்க பல்வேறு வழிகளை எடுக்க முற்பட்டுள்ளன. கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் படங்களையும், முகவரியையும் பத்திரிகைகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவமானப்படுத்தினாலாவது கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிச் செலுத்துவார்கள் என்று வங்கி அதிகாரிகள் கருதுகின்றனர். கடனை திருப்பிச்செலுத்தாதவர்களின் படங்களையும், முகவரியையும் பத்திரிகைகளில் வெளியிடும் முறை இப்போதும் நடைமுறையில் உள்ளது.

இப்படி அவமானப்படுத்தினாலாவது வாங்கிய கடனை திருப்பி செலுத்துவார்கள் என்று வங்கி அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும்  கடனை வாங்க உறுதியளித்தவர்களின் படங்களையும், முகவரியையும் பத்திரிகைகளில் வெளியிடவும், படங்களை வீடுகளைச்சுற்றி ஒட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த  நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக ஓரியண்டல் பேங்க்ப் ஆப் காமர்ஸ் தலைவர் பன்சால் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: