இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, ஜூலை.13 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல் நடத்தின என்று எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து இந்திய எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் திருப்பிச் சுட்டனர் என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் துருப்புகள் 30 நிமிடம் துப்பாக்கியால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சுட்டனர். கடந்த மாதம் மட்டும் பாகிஸ்தான் துருப்புகள் 5 முறை  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: