தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்தில் 6 பேர் காயம்

புதன்கிழமை, 17 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜூலை.18 - போலீஸ வாகனம் மீது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீஸார், விசாரணைக் கைதி ஒருவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். ஸ்ரீநகரில் உள்ள படமாலூ  என்ற இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. விசாரணைக் கைதி ஒருவரை போலீஸார் ஒரு வாகனத்தில் படமாலூ பஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ் வாகனத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு நேற்று வெடித்ததில் விசாரணைக் கைதி ஷகீல் அகமது காதனா உள்ளிட்ட  6 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். குண்டு வெடித்தபோது அந்த வழியாக நடந்து சென்ற குலாம் நபி என்பவர் காயமடைந்தார். 

பந்தாசவுக் காவல் நிலையத்திலிருந்து, பாரமுல்லா மாவட்ட சிறைக்குத் கொண்டு சென்றபோது போலீஸ் வாகனத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் பலத்தக் காயமடைந்த ஷகீல் அகமதுவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த ஆண்டு ஷகீல் அகமது காதனா கைது செய்யப்பட்டார். இது, ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த மாத துவக்கத்தில் நடைபெற்ற முதல் குண்டு வெடிப்புச் சம்பவமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: