பா.ஜ.க. கூட்டம்: தேர்தல் குழுவை மோடி அறிவிப்பாரா?

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூலை. 19 - பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தனது தேர்தல் குழுவை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பா.ஜ.க. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கின்றது. இந்நிலையில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதில் தனது தலைமையிலான தேர்தல் குழுவை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  பா.ஜ.க. பொதுச் செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகளுக்கு எந்தெந்த பணி ஒதுக்கப்படும் என்று தெரிய வரும். முன்னதாக இது தொடர்பாக மோடி பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கை நேற்று முன்தினம் இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவதை நாக்பூரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: