மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: காங்., தொண்டர்கள் 3 பேர் சாவு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஜூலை.22  - மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் குண்டு, கல் வீச்சு சம்பவங்களில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்  3 பேர் உயிரிழந்தனர். இரு போலீஸார் உள்பட பலர் காயமடைந்கனர்.  

   மேற்கு வங்கத்தில் 4-ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில், கபஸ்டங்கா என்ற இடத்தில்  வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூர்முகமது ஷேக், ஆஸாத் அலி ஆகியோர் எதிர் தரப்பினர் குண்டு வீசியதில் இறந்தனர். ரிபான் ஷேக் என்பவரும் குண்டு வீச்சுக்கு இலக்காகி உயிரிழந்தார். 

பல இடங்களில் குண்டு வீச்சு, கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில் பலர் காயமடைந்தனர். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், எங்கள்  கட்சியினரை தாக்கி வருகின்றனர் என்று காங்கிரஸ் கட்சி பிரமுகர் அசோக் தாஸ் குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: