முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ.வுக்கு எதிரான டி-20: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஹம்பன்டோடா, ஆக. 8 - தெ.ஆ. வுக்கு எதிராக ஹம்பன்டோ டாவில் நடைபெற்ற 3-வது டி- 20 கிரி க்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், தில்ஷான் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத் துச் சென்றார். அவருக்குப் பக்கபலமா க, ஜெயவர்த்தனே, சி. பெரீரா, மேத்யூஸ் மற்றும் கேப்டன் சண்டிமால் ஆகி யோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, குல சேகரா, லக்மல், மென்டிஸ். மேத்யூஸ் மற்றும் சேனநாயகே ஆகியோர் அடங் கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி தெ.ஆ. அணியின் ரன் ரேட்டைக் கட்டு ப்படுத்தியது. 

இலங்கை மற்றும் தெ.ஆ. அணிகளுக்கு இடையேயான 3-வது டி - 20 போட்டி ஹம்பன்டோடாவில் உள்ள ராஜபக்சே சர்வதேச அரங்கத்தில் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய தெ. ஆ.அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்னை எடுத்தது. 

தெ.ஆ. அணி தரப்பில், கேப்டன் டுபிளீ செஸ் அதிகபட்சமாக 65 பந்தில் 85 ரன் னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற் றும் 3 சிக்சர் அடக்கம். டுமினி 34 பந்தி ல் 51 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, டிகாக் 16 ரன்னை எடுத்தார். 

இலங்கை அணி சார்பில், லக்மல் 29 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். தவிர குலசேகரா மற்றும் மென் டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத் தனர். 

இலங்கை அணி 164 ரன்னைஎடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை தெ.ஆ. அணி வைத்தது. அடுத்து ஆடிய அந்த அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்இழ ப்பிற்கு 164 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 3- வது போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாச த்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 2 -1 என்ற கணக்கில் முடிந்தது.

இலங்கை அணி தரப்பில் துவக்க வீர ராக இறங்கிய தில்ஷான் அதிக பட்ச மாக, 51 பந்தில் 74 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அட க்கம். தவிர, ஜெயவர்த்தனே 33 ரன்னையும், சி. பெரீரா 25 ரன்னையும், கேப்ட ன் சண்டிமால் மற்றும் மேத்யூஸ் ஆகி யோர் தலா 14 ரன்னையும் எடுத்தனர். 

தெ. ஆ. சார்பில் வைஸ் 24 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பர்னெல் மற்றும் இம்ரான் டாகிர் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக தில்ஷானும், தொடர் நாயகனாக டுமினியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்