முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் தூக்கிலிடப்படுவதை நிறுத்தி வைக்க உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஆக.18 - பாகிஸ்தானில் தூக்குத்தண்டனை பெற்றிருக்கும் தீவிரவாதிகள் மற்றும் தூக்குத்தண்டனை பெற்ற கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்திவைக்க அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-ஈ-ஜங்வி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 2 முக்கிய தீவிரவாதிகளுக்கு அந்த நாட்டு கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்துள்ளது. இவர்களுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் காலம் நெருங்கிக்கொண்டியிருக்கிறது. அவர்கள் இருவரையும் தூக்கில் போட வேண்டாம் என்று பாகிஸ்தானில் உள்ள சில முக்கிய பிரமுகர்களும் அரசியல் கட்சிகளும் அதிபர் ஜர்தாரியை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனையொட்டி தூக்குத்தண்டனையை நிறுத்திவைக்கும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அதிபர் ஜர்தாரி கடிதம் எழுதியிருக்கிறார். ஜர்தாரி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். தாம் நாடு திரும்பும்வரை அந்த 2 தீவிரவாதிகளை தூக்கிலிடுவதை நிறுத்திவைக்கும்படி ஜர்தாரி கேட்டுக்கொண்டுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட நவாஸ் ஷெரீப் அந்த இரண்டு தீவிரவாதிகளையும் தூக்கிலிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜர்தாரி நாடு திரும்பி அவருடன் நான் சந்தித்து பேசும் வரை தூக்குத்தண்டனையை நிறுத்திவைக்கும்படி அந்த உத்தரவில் ஷெரீப் கூறியுள்ளார். 

பாகிஸ்தானில் ஏற்கனவே தூக்குத்தண்டனைக்கு 5 ஆண்டு காலம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜர்தாரி நாடு திரும்பியதும் ஒருவேளை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தானில் தூக்கித்தண்டனைக்கு இடைக்கால தண்டனை விதித்திருப்பது ரத்தாகிவிடும். தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதை ஜர்தாரி நிறுத்திவைத்திருப்பது சரியானது அல்ல என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தான் சிறைகளில் நூற்றுக்கணக்கானோர் தூக்குத்தண்டனை கைதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றப்படுவதை நிறுத்திவைக்கும்படி ஷெரீப்புக்கு ஜர்தாரி எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்