முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது நாளை இறுதிக்கட்ட தேர்தல்

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மே.  -9 - மேற்கு வங்கத்தில் 6 வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்த நிலையில் வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. இத்துடன் 6 கட்ட தேர்தல் முடிவுக்கு வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் முடிந்து விட்டன. 5 ம் கட்ட தேர்தல் கடந்த 7 ம் தேதி 38 தொகுதிகளில் நடந்தது. அப்போது 82 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை மொத்தம் 280 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் 14 தொகுதிகள்தான் பாக்கி. இந்த 14 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. பிரச்சாரம் நேற்றோடு முடிந்ததால் பல்வேறு கட்சி தலைவர்கள் நேற்று மாலை 5 மணி வரை மின்னல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாளை 6 வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 14 தொகுதிகளில் நடக்கவிருக்கிறது. இதையொட்டி தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளையுடன் மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகள் முடிவுக்கு வருகின்றன. 13 ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அப்போது இம்மாநிலத்தில் வெற்றி பெறப் போவது மம்தா பானர்ஜியா, அல்லது இடதுசாரிகளா என்பது தெரிந்து விடும். இதே போல் தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலும் அன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் கடப்பா எம்.பி. தொகுதியிலும், புலிவெந்துலா சட்டசபை தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெற்றது. கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். இது இவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். இதே போல் புலிவெந்துலா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். மனைவி விஜயலெட்சுமி போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. 2 தொகுதிகளிலுமே மும்முனைப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago