முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: கால்இறுதியில் செரீனா வில்லியம்ஸ்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், செப். 3 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக நம்பர் -1 வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெற்றி  பெற்று காலிறு திச் சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் போலந்தின் முன்னணி வீராங் கனையான அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறி னார். 

இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இது தற்போது காலிறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 4-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் அமெரிக்க நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்சும், சக நாட்டு வீராங்கனையும் மோதினர். 

இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் செரீனா அபாரமாக ஆடி, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்டெப் ஹென் சை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

அடுத்து நடக்க இருக்கும் கால் இறுதிச் சுற்றில் அமெரிக்க முன்னணி வீராங்க னையான செரீனா 18 -ம் நிலை வீராங் கனையான கார்லாவை எதிர் கொள்கிறார். 

மற்றொரு 4 - வது சுற்று ஆட்டம் ஒன்றி ல், ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர்பரும், 18-ம் நிலை வீராங்கனையான கார்லா வும் மோதினர். இதில் கார்லா 4-6, 6-3, 7-6(7) என்ற செட் கண க்கில் ஹெர்ப ரை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார். 

இதே போல உலகின் 3-ம் நிலை வீரா ங்கனையான போலந்தைச் சேர்ந்த ரட்வன்ஸ்கா 4-வது சுற்றில் அதிர்ச்சிகர          மாக தோற்றார். 

ரஷ்யாவைச் சேர்ந்த 24-ம் நிலை வீரா ங்கனையான மகரோவா 6-4, 6- 4 என்ற நேர் செட் கணக்கில் ரட்வன்ஸ்கா வை வென்றார். 

சீனாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான நாலீயும், செர்பிய வீராங்க னையும் மற்றொரு ஆட்டம் ஒன்றில் மோதினர். இதில் நாலீ 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஜான்கோவிக்கை வென்றார். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 3-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் உலக நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக்கும், போர்ச்சுகல் வீரரும் மோதினர். 

இதில் செர்பிய வீரரான நோவக்  அபா ரமாக ஆடி, 6-0, 6-2, 6-2 என்ற நேர் செ ட் கணக்கில் ஜோசவுசாவை வென்று 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றார். 

இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான ஆன் டி முர்ரே மற்றொரு 3- வது சுற்றில் 7-6(7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர் மனி வீரர் புளோரன் மேயரை வென்றார். 

செக். குடியரசைச் சேர்ந்த 5-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் மற்றொரு ஆட்டத்தில் 6-0, 6-2, 6-2 என்ற நேர் செ ட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஜூலிய னை தோற்கடித்தார். 

மற்ற ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ர்னிகா, ரஷ்ய வீரர் மைக்கே ல் யூஜெனி, ஆஸ்திரேலிய வீரர் லெய்டன் ஹெவிட் ஆகியோர் வெற்றி பெற் று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்