முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேத்தியுடன் இருப்பது மாதிரி இருந்தேன்: ஆசாராம்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜோத்பூர், செப். 4 - கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள சாமியார் ஆசாராம் பாபு, அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் அவரிடம் பாலியல் அத்துமீறல் ஏதும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.  வட மாநிலங்களில் பிரபலமான ஆசாராம் பாபு (72) மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். அதில் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த, 16 வயது சிறுமி, ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசாராம் கைது செய்யப்பட்டார். இப்போது விசாரணையில் இருந்து வரும் ஆசாராமுக்கு ஆண்மை சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் முழு ஆண்மையுடன் இருப்பதும், பலாத்காரம் செய்யும் நிலையில் அவரது உடல் நிலை இருப்பதும் உறுதியானது. முதலில் எல்லாவற்றையும் மறுத்த ஆசாராம், பின்னர் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை ஒப்புக் கொண்டார். ஆனால், தவறு ஏதும் செய்யவில்லை என்றார். 

மேலும் தாத்தாக்கள் தங்களது பேத்திகளுடன் நேரம் செலவிடுவது சகஜம் தானே என்று கூறியுள்ளார் ஆசாராம். நான் அந்தப் பெண்ணுடன் பலமுறை தனியாக நேரம் செலவிட்டு, நிறைய பேசுவது வழக்கம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக தான் யாரையும் பலாத்காரம் செய்யும் அளவுக்கு ஆண்மையுடன் இல்லை என்றும் ஆசாராம் கூறியிருந்தார். ஆனால், அவரை பரிசோதித்த 3 டாக்டர்கள் குழு, மருந்து ஏதும் சாப்பிடாமலேயே ஆசாராமால் பாலியல் புணர்ச்சியில் ஈ்டுபட முடியும் அளவுக்கு அவரது உடல் நிலை திடமாகவே உள்ளதாகக் கூறிவிட்டனர். 

இதையடுத்து அந்தப் பெண்ணுடன் நேரம் செலவழித்தேன், ஆனால், ஏதும் செய்யவில்லை என்று அடுத்த பல்டி அடித்துள்ளார் ஆசாராம். உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை: இந் நிலையில் ஆசாராம் பாபுவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரெய்லியில்காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். 

இந் நிலையில் ஜோத்பூர் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ஆசாராமை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சாமியார் அசராம் பாபு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து ஜோத்பூர் சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் போராட்டக்காரர்களை மிகக் கடுமையான தடியடி நடத்தி விரட்டினர். காதலர் தினத்தை தாய் தந்தையரை பூஜிக்கும் தினமாக அறிவிக்க வேண்டும். இளைஞர்கள் மேற்கத்திய கலாசாரத்தால் ஈ்ர்க்கப்பட்டு நெறிதவறிப் போய், பெண்கள் வன்கொடுமை போன்ற துன்பங்களுக்கு ஆளாவது தடுக்கப்பட வேண்டும் என்றால், காதலர் தினம் போன்ற மேற்கத்திய கலாசார கொண்டாட்டங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த வருடம் காதலர் தினத்தன்று ஆசாராம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்