முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன ஆயுதத்தை ஒப்படைக்க தாமதித்தால் தாக்குதல்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.12 - ரசாயன ஆயுதத்தை ஒப்படைக்க தாமதித்தால் சிரியா மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக போராடுவோம் என்ற பொதுமக்கள் மீது கடந்த 21-ம் தேதி ராணுவம் ரசாயன குண்டுகளை வீசியது. அதில் 1429 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்க சிரியா மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அறிவித்தது.

இதற்கு சிரியாவின் நட்பு நாடுகளான ரஷியா, சீனா ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே ராணுவ நடவடிக்கையை தவிர்க்க சிரியா தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகள் கண்காணிப்பு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என ரஷ்யா யோசனை தெரிவித்தது. அதை சிரியா ஏற்றுக்கொண்டது. இதனை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஏற்றுக்கொண்டார். ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்கும் சிரியாவின  இந்த சமாதான முடிவை பிரான்சு. சீனா ஆகிய நாடுகளும் வரவேற்அறன. இதற்கிடையே தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது தாக்குதில் நடத்த வேண்டிய அவசியத்தை விளக்கினார். அதை தொடர்ந்து டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை கருதித்தான் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த தீர்மானித்தோம். ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்காவிடில் சிரியாவின் ரசாயன ஆயுதத்தை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பேச்சே எழுந்திருக்காது. 

தற்போது ரஷியா ஐ.நா.சபை மற்றும் நட்பு நாடுகளுடன் ஆன நல்லுறவுக்கே சிரியா மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அதிபர் ஆசாத் தனக்கு சாதகமாக பதன்படுத்தி கொண்டு ரசாயன ஆயுதங்களை ஒப்படைப்பதில் தாமதப்படுத்தக்கூடாது. அவ்வாறு தாமதித்தால் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சிரியா மீது குறைந்த அளவிலான ராணுவத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படும். இவ்வாறு அதிபர் ஒபாமா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்