கிரிக்கெட் வீரர் பாலாஜி மாடல் அழகியை மணந்தார்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

சென்னை, செப். 18 - சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் எல். பாலாஜிக்கும், மாடல் அழகி பிரியாநலூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பாலாஜி, பிரியாநலூர் திருமணம் சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தது. 

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடுவதால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என். சீனிவாசன், வீரர்கள் முரளி விஜய், பத்ரிநாத், அணிருதர், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். 

31 வயதான பாலாஜி ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். வேகப்பந்து வீரரான அவர் இந்திய அணிக்காக 8 டெஸ்ட் 30 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டியில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார். தற்போது தமிழக அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடி வருகிறார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: