ஆஷஷ் சர்ச்சையில் சிக்கிய பனேசருக்கு அணியில் இடம்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், செப்.25 - ஆஷஷ் தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் மீண்டும் இடம் பிடித்துள்ளார். சர்ச்சையில்  சிக்கியபோதிலும், அவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆஷஷ் தொடர் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளன.  இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.   

17 பேர் கொண்ட அணியில் பனேசரும் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் கிரீம் ஸ்வானுக்கு அடுத்தபடியாக சிறப்பான சுழற்பந்து வீச்சாளர் என்ற பெயரை பனேசர் பெற்றுள்ளார். ஆனால் கடந்த மாதம் நடந்த சம்பவத்தால் பனேசர் சர்ச்சையில் சிக்கினார். ஆகஸ்ட் 5-ம் தேதி பொது இடத்தில் சிறுநீர் கழித்த குற்றத்துக்காக போலீஸாரிடம் சிக்கினார் பனேசர். இதையடுத்து இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து தென் கடலோர கவுண்டி சஸ்ஸக்ஸ் அணியிலிருந்து, பனேசர் நீக்கப்பட்டார். ஆனாலும் இப்போது ஆஷஷ் தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.  மொத்தம் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 25-ம் தேதி இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் செல்கிறது.  முதல் டெஸ்ட் பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நவம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது. அணி விவரம்: அலாஸ்டர் குக் (கேப்டன்), ஜோ ரூட், ஜோனதான் டிராட், கெவின் பீட்டர்சன், இயன்பெல், ஜானி பேர்ஸ்டோவ், மாட் பிரையர், ஸ்டூவர்ட் பிராட், கிரீம் ஸ்வான், ஜேம்ஸ் ஆன்டர்சன்,  ஸ்டீவன்பின், பாயிட் ரேங்கின்,  பென்ஸ்டோக்ஸ்,  மான்டி பனேசர், மைக்கேல் கார்பெர்ரி, கேரி பேலன்ஸ், கிறிஸ் டிரெம்லெட்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: